tamilnadu

img

பருப்பு விலையும் உயர்ந்தது

சென்னை,செப்.30- சென்னை கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும், தமிழகத் தின் தென் மாவட்டங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் வரவழைக்கப்படுகின்றன. இங்கி ருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மொத்த விலையில் மளிகை பொருட்கள் விற்ப னைக்காக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த நிலையில் பருப்பு வகைகள் விலை அதிகரித்துள்ளது. சில மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. 

உற்பத்தி பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பருப்பு வரத்து குறைவாகவே இருந்து வருகிறது.  பெரும்பாலும் ஆந்திர மாநிலம் மற்றும் தேனி,  விருது நகரில் இருந்து தான் பருப்பு அதிகளவில்  வரும். தற்போது விளைச்சல் பாதித்துள்ளதால் வழக்கமான அளவைக் காட்டிலும் 30 சதவீத பருப்பு மூட்டைகளே கோயம்பேட்டுக்கு வருகின்  றன. இதனால் பருப்பு வகைகளில் விலை கிலோ வுக்கு குறைந்தபட்சம் ரூ.3 முதல் அதிகபட்சமாக ரூ.7 வரை விலை உயர்ந்திருக்கிறது.  முந்திரி, உலர் திராட்சை, மிளகு, மிளகாய்  உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்திருக்கிறது.

;